மதுரையில் தீவிபத்தின் போது மீட்பு பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

மதுரையில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த சிவராஜ் என்பவருக்கு திருமணமாகி 5 இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி கணவர் இறப்பிற்கு பிறகும் கனவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் சிவராஜ் மறைவிற்கு தமிழக அரசு சார்பாக இழப்பீடு அறிவித்திருந்தனர். அந்த பணத்தை பிரிப்பதில் இரு வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கையர்க்கன்னி தாயார் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கணவன் இறப்பாள் மனஉளைச்சலில் இருந்து வந்த அங்கையர் கன்னி இன்று வீட்டில் தனியாக இருந்த அங்கையற்கண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!