மதுரையில் உள்ள தனியார் விடுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆதித்தமிழர் பேரவையின் தெண் மண்டல செயற்குழு கூட்டம்மாநில துணை பொதுச்செயலாளர் கபீர் நகர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் நிறுவன தலைவர் அதியமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மற்றும் தென் மண்டல நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல்நடைபெற்றது.தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய நிறுவனத் தலைவர் அதியமான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் அதற்கு ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையோடு பாடுபட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.இக் கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் தமிழரசி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் நிதிச் செயலாளர் பெருமாவளவன் மாநில அமைப்புச் செயலாளர் முத்து கிருஷ்ணன் மாநில செயலாளர் கலை இலக்கிய பேரவை செல்வம் உட்பட தென் மாவட்டங்களிலிருந்து ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.