மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பராசக்தி நகரில் முத்துட் பைனான்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் உள்ளது .இந்த நிதி நிறுவனத்தில் தங்க நகைகளின் பேரில் அடகு வைக்கப்பட்டு பணம் பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் 10க்கும் மேற்பட்டோர் தங்கள் அடகு வைத்த நகைகளை மீட்கச் சென்ற போது பணத்தை மட்டும் கட்டி விட்டுச் செல்லுங்கள், நகையை ஒரு மாதம் கழித்து தருகிறோம் என கூறியதாக கூறப்படுகிறது இதனையடுத்து ஊழியர்களுடன் நகை அடகு வைத்தவர்கள் வாக்குவாதம் செய்தனர்.இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் வந்து விசாரணை செய்ததில் தனியார் நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய மேலாளர் மகேஷ் அடகு வைத்த நகையின் பேரில் கூடுதலாக பணம் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மகேஷ் மேல் நிறுவனத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அடகு வைத்தவர்கள் தங்கள் நகையை மீட்க வந்த போது பணத்தை மட்டும் செலுத்துங்கள் நகை ஒரு மாதம் கழித்து திருப்பி தருகிறேன் என கூறியதை அடுத்து பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடகு வைத்தவர்கள் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர் ….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.