திருமங்கலம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்து போனது.திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கண்மாய் பகுதி அருகே நான்கு வழிச்சாலை உள்ளது. கண்மாயில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன.இந்த புள்ளி மான்கள் சாலையை கடக்க முயலும்போது வாகனங்களில் அடிபட்டு பலியாவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் ராமலிங்கம் கூறுகையில், இந்த அரியவகை புள்ளி மான்களை காக்க வனத்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூகவிரோதிகள் கண்மாயில் உள்ள மான் களை வேட்டையாடுவது தொடர்ந்து வரும் நிலையில் இதுபோல விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே புள்ளி மான்களை காக்க இந்தப் பகுதியில் வனச் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!