2021 மார்ச் 15ஆம் தேதிக்குள்ளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்படும் – மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் உறுதி.,………

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”மதுரை பெரியார் பேருந்து நிலையம் 1971ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்காக 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018ல் மதுரை கிளையில் 18 மாதங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என மதுரை மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் முடிய உள்ள நிலையிலும், இன்னமும் பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஓட்டுநர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகவே பெரியார் பேருந்து நிலைய அருகேயுள்ள தற்காலிக பேருந்து நிலைய பகுதியில் போதுமான கழிவறை, குடிநீர், மேற்கூரை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும், நீதிமன்றத்தில் அளித்த உறுதியின் அடிப்படையில் விரைவாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தை கட்டி முடிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில்,” 80% பணிகள் முடிந்துள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 40 முதல் 42 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாகவே தெரிகிறது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மதுரை மாநகராட்சி தரப்பில்,” மார்ச் 15 ஆம் தேதிக்குள்ளாக பணிகள் முடிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!