சோழவந்தானில் வறுமையில் வாடும் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வீடு இடிந்து கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளாத அவலநிலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பட்டணம் என்ற நயினார் முகம்மது 1972 முதல் அதிமுக தொண்டராகவும் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்துவருகிறார் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம்ஜிஆருடன் பிரச்சாரம் சென்ற பேச்சாளர்களில் ஒருவர் தொடர்ந்து அதிமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளிலும் தெருமுனை பிரச்சாரங்களிலும் பேசி வந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த வறுமையில் வாடி வருகிறார் தலைமைக்கழகம்அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார் இதனால் மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் காணப்படுகிறார் தொடர்ந்து வயோதிகத்தின் காரணமாகவும் மருத்துவமனை சென்று உடல் நலத்தை சோதிக்க கூட வசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார் தற்போது வடகிழக்கு பருவமழைன் போது அவரது வீடு முற்றிலுமாக இடிந்து விட்டது இதுகுறித்து எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்

அவர் கூறும்போது திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம்ஜிஆருடன் பிரச்சாரம் செய்தேன் தொடர்ந்து கட்சிக்காக பல முறை சிறை சென்று இருக்கிறேன் இதுவரை கட்சியில் இருந்து எந்த ஒரு உதவியும் கேட்டுப் பெற்றதில்லை தற்போது உடல் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதால் தலைமை கழகம் முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள்ஆகியோர் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்மேலும் இடிந்த எனது வீட்டை கட்டி தரவேண்டும் என்றும் எனது மகன்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!