மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சிந்தாமணி அருகே அமைந்துள்ளது அழகர் நகர்.இப்பகுதியானது மாநகராட்சிக்குட்பட்ட விரிவாக்கப்பகுதியாகும்.இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.மேலும் அப்பளம் உள்ளிட்ட சிறு குடிசைத் தொழில்கள் இயங்கி வருகின்றன.ஆனால் இப்பகுதியில் 10 வருடத்துக்கும் மேலாக சாலை வசதி குடிநீர் வசதி பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஆனால் மாநகராட்சியின்சாக்கடை வரி தண்ணீர் வரி உள்ளிட்ட வரி தொகையினை செலுத்தி வருகின்றனர்இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் சாலை வசதி சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு சிந்தாமணிநெடுங்குளம் மெயின் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்த பின்னரே பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.