மதுரை சின்னக்கடை வீதியில் பதுக்கி வைத்திருந்த 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.சின்ன கடை வீதி எழுத்தாணி கார தெருவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெற்குவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .போலீசார் அந்த பகுதியை கண்காணித்து சோதனை நடத்திய போது எழுத்தானிக்கார தெருவில் 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்திருந்த அசோக்குமார் ஜெயின் 50 முத்துப்பாண்டி 53 சாய்ராம் 57 ஆகிய மூவரையும் கைது செய்து செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.