வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்துசெய்திடமாநிலநிதிக்குழுநிதியை முழுமையாக வழங்கவேண்டும்

வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்துசெய்திட மாநிலநிதிக்குழுநிதியை முழுமையாகவழங்கவேண்டும் என்று யூனியன்கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியக்குழுஉறுப்பினர்கள் கூட்டம் யூனியன்அலுவலகவளாககூட்டஅறையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமிராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.யூனியன் கமிஷனர்கள் ராஜா(வ.ஊ), சாந்திராணி(கி.ஊ.) ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைசேர்மன் தனலெட்சுமி கண்ணன் வரவேற்றார். வட்டாரவளர்ச்சிஅலுவலர்(நிர்வாகம்)சக்திவேல் தீர்மான அறிக்கை வாசித்தார்.இந்தகூட்டத்தில் ஒன்றியகவுன்சிலர்கள் கே.பவித்ரா, மா.தங்கபாண்டியன்,முத்துபாண்டி, க.தங்கபாண்டி, பசும்பொன்மாறன், வீ.ரேகா, சிவக்குமார், கார்த்திகா, பஞ்சவர்ணம், வசந்த கோகிலா, மு.தனபாலன், சுப்பிரமணி, ஒன்றியபொறியாளர் பூப்பாண்டி, வட்டார விரிவாக்க அலுவலர் வீரலட்சுமி உள்படபலர்கலந்துகொண்டனர். இந்தகூட்டத்தில் மாநிலநிதிக்குழுநிதி மாதந்தோறும் வந்த ரூ.17லட்சம் தற்போது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரூ.5லட்சம் மட்டும்வருகிறது. இதில் யூனியன் அலுவலக மாதந்தரசெலவு ரூ.12லட்சமும், டெங்கு பணிக்கு ரூ.3லட்சம் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் செலவினங்களால் இருப்புநிதியும் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டு வளர்ச்சிப்பணிகள் செய்ய முடியாத அவல நிலை உருவாகிவருகிறது. எனவே மாநிலநிதிக் குழுநிதியை முன்பு போல்வழங்கவும், டெங்குபணிக்குரிய செலவினங்களை மாவட்டநிர்வாகம் வழங்கவேண்டும்; என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வேளாண்மை, கல்வி, கால்நடை,சத்துணவு, காவல்துறை உள்ளிட்ட பலதுறைகளை சேர்ந்த அதிகாரிகள்ஒன்றியக்குழுகூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்றும் நீர்நிலைகளை பாழ்படுத்தும்விதமாக உயர்நீதிமன்ற உத்தரவினை மீறிமீன்பாசிஏலம் விடும் ஊராட்சி மன்றம் மீது நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முடிவில் உதவியாளர் பாலசந்திரன் நன்றிகூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!