ஒரே மாதத்தில் 15க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் பலி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில்   புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளது ..கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உயிரிழந்து உள்ளது என இதுகுறித்து வனத்துறையினர் , மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . பொதுமக்களிடம் கேட்ட போது பொதுமக்கள் கூறுவது என்னவென்றால் குடிநீர் மற்றும் இறை தேடி புள்ளிமான்கள் ஊருக்குள் வரும்பொழுது தெரு நாய்கள் கடித்து விடுகிறது ..வாகனத்தில் சிக்கியும் இதனால் காயம் அடைந்து அது உயிரிழக்க நேரிடுகிறது ..கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது இதே நிகழ்வு தொடர்ந்து என்றால் புள்ளிமான்கள் இனமே முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.. புள்ளிமான்க்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வனப் பகுதியிலேயே கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை ஆகும்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!