உதவிகோரி மனு அளிக்க வந்த பெண்ணிற்கு வலிப்பு!

மதுரையில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி S.சசிகலா என்பவர் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA அவர்களை சந்திக்க நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கணவரால் கைவிடப்பட்ட அந்த பெண்ணிற்கு இருதய பிரச்சினையுடன் உள்ள ஒரு சிறு குழந்தையும் உள்ளது.இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனே, ஓடோடி வந்த டாக்டர்.சரவணன்  அந்த பெண்ணிற்கு முதலுதவி அளித்து, இருக்கையில் அமர வைத்து அவரது பிரச்சனைகளை கேட்டறிந்தார்.ஆதரவின்றி தவிக்கும் தனக்கும், இருதய பிரச்சினையுடன் உள்ள தனது மகனின் மருத்துவ செலவிற்கும் உதவுமாறு கேட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் தனக்கு தேவையான உதவி எதுவும் கிடைக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.தற்போதைக்கு வீட்டு செலவிற்காக நிதியுதவி அளித்த டாக்டர்.சரவணன்  குழந்தையின் மருத்துவத்திற்கு தனது சரவணா மருத்துவமனையில் இலவசமாக பார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.மேலும், தனது அலுவலக உதவியாளர்களின் மூலம் அந்த பெண்ணை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்று மாதந்தோறும் அரசு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளார். தொடர்ந்து, அந்த பெண் விரும்பினால் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!