மதுரை. கிடைத்த வேலை பிடிக்காமல் மனமுடைந்த பீல்டு ஆபீசர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி ஊரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராம்குமார் 20. இவர் மதுரையில் பீல்டு ஆபீஸராக வேலை பார்த்து வந்தார். உத்தங்குடியில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தார் .இந்த வேலை அவருக்குப் பிடிக்காமல் வேலையை விட்டு ஊருக்கு சென்றுவிட்டார் .இதை அவர் தந்தைகண்டித்தார். இதனால் மனமுடைந்த ராம்குமார் மன அழுத்தம் காரணமாக அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்துகே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.