திருப்பரங்குன்றம் கோவில் பா.ஜ.,வின் வெற்றி வேல் யாத்திரைக்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது” என மாநில தலைவர் முருகன் பேட்டி.!!

பா.ஜ.,வின் வெற்றி வேல் யாத்திரைக்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது” என மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.திருத்தணியில் துவங்கிய பா.ஜ., வேல் யாத்திரை மதுரை அழகர்கோவிலுக்குநேற்று வந்தது. அங்கு பா.ஜ., மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திருமுருகன், மேலுார் ஒன்றிய தலைவர்திருப்பதி மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.சோலைமலை முருகன்கோயிலில் முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாநில துணை தலைவர் மகாலட்சுமி, கலை கலாசார பிரிவு பொறுப்பாளர் காயத்திரி ரகுராம், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன் மற்றும் நிர்வாகிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, கடச்சனேந்தல், புதுார், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முருகன் கூறியதாவது: நவ.,6ல் வேல்யாத்திரை துவங்கியது. கரூரில் யாத்திரை நடந்தபோது, புயல், மழை காரணமாக நிறுத்தப்பட்டது. மீதமுள்ள அறுபடை வீடுகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நாளை (டிச.,7) திருச்செந்துாரில் யாத்திரை நிறைவு பெறுகிறது. அங்கு ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.யாத்திரைக்கு மாநிலம்முழுவதும் மிகப்பெரியஆதரவு கிடைத்துள்ளது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!