தமிழகத்தில் 76 குடிநீர் திட்டப் பணிகள்.தமிழக முதல்வர் எடப்பாடி பெருமிதம்

தமிழகத்தில், மத்திய, மாநில அரசின் நிதியான ரூ. 3650 கோடி மதிப்பீட்டில் 76 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மதுரையில் 1295.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியது:மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமணை பணிகள் தொடங்கப்படும்.மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணியின் போது, கீழ்பாலம் அமைக்கப்படும்.மதுரையை பொறுத்த வரை பல்வேறு உயர் மட்டப்பாலம், பறக்கும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.அரசு பள்ளிகளின் மாணவர்களுக்காக 7.5. மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலனை பேணி காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுவதாகவும், 2023…ல் மதுரை நகரில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்.துணை முதல்வர் ஒபிஎஸ்:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா தான்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் புகார்களை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்றார்.தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் வரவேற்றார்.அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, திண்டுக்கல் சீ. சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், நீதிபதி, சரவணன், பெரியபுள்ளான், வே. ராசன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், பிஆர்ஓ.க்கள் நவீன்பாண்டியன், சித்திரவேலு, சாலிதளபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!