மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கோஷமிட்டனர்.அகில இந்திய ஒருங்கிணைந்த விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராமன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.