விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11 மணி தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கொரோனா காலத்தில் பயிற்சி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 200 பயிற்சி காவலர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 249 பயிற்சிகாவலர்கள் என மொத்தம் 449 பயிற்சி காவலர்கள் பயிற்சி பெற்றனர்பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல் மன உறுதிப்படுத்தும் பயிற்சி மற்றும் கலவர நேரங்களில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் என பல்வேறு பயிற்சிகளை பெற்ற பயிற்சி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11மணி கவாத்து மைதானத்தில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் சென்னை தகவல் தொழில்நுட்ப சேவை கூடுதல் காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்துகொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு ஏற்றுக்கொண்டார் அதன்பின்பு பயிற்சி பெற்ற காவலர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென அறிவுரைகளையும் வழங்கினார்இதில் துப்பாக்கி சுடுதல் மற்றும் பயிற்சியின்போது கணினி உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் மதுரைடி.ஐ.ஜி ராஜேந்திரன் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி தமிழ்நாடு சிறப்புப் பணி இராஜபாளையம் முதல்வர் ராஜசேகரன் பயிற்சி சார்பாளர் கௌதமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த பயிற்சி பெற்று இன்று பயிற்சி நிறைவு வரும் பயிற்சி காவலர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தங்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.