மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு நல்ல பாம்புகள் ஆனந்த நடனம் ஆடியதை மக்கள் ஆவலுடன் பார்த்தனர்.திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவரது தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் நேற்று மாலை இரண்டு நல்ல பாம்புகள் ஜோடி சேர்ந்து ஆனந்த நடனம் ஆடியது.
இதை அறிந்து கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பாம்புகளின் நடனத்தை ஆவலுடன் கண்டு ரசித்தனர்.சுமார் ஒரு மணி நேரம் இந்தப் பாம்புகளின் நடனம் நீடித்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.