அடிப்படை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோதை நாச்சியார் புரம் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் அடிப்படை வசதியான வாறுகால் சாலை வசதி, கழிப்பறை வசதி மேலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இதை சரி செய்ய வேண்டும் என பலமுறை மேல பாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி லட்சுமி அழகாபுரியனிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாகவும் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேறாமல் தங்கள் பகுதிக்கு தேவையான தண்ணீர் வசதி குடிநீர் வசதி சாலை வசதி கழிப்பறை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி இன்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை to தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர் இந்த தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமப்பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்உடனடியாக இந்த பகுதிக்கு இராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு தினங்களில் குடிநீர் பிரச்சனை மற்றும் சாலை வசதிகள் சீரமைக்கும் பணி நடைபெறும் என உறுதி அளித்த பின்பு போராட்டத்தை கைவிட்டனர்இந்த போராட்டம் குறித்து நம்மிடையே கூறிய பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சாயத்து தலைவரிடமும் மனு அளித்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எங்கள் பகுதிக்கு வரக்கூடிய குடிநீரை அப்படியே விவசாய பணிகளுக்கு திரும்பி விடுவதாகவும் அதனால் எங்கள் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இந்த செயலை பஞ்சாயத்து தலைவர் செய்வதாக குற்றச்சாட்டு வைத்தனர் மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் எதையும் செய்யவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாவட்ட மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்….

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!