லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா நான்குமுனை சந்திப்பில் ராசு அவரது மனைவி பஞ்சவர்ணம் வயது 70 இவர் நேற்று மாலை பைக்காரா சாலையில் சாலையை கடக்க முயன்றுள்ளார் அப்பொழுது அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது மோதியதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பஞ்சவர்ணம் உயிரிழந்தார் தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் விபத்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி .காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!