இராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவிகள் கொரோணா விழிப்புணர்வு யோகாசனங்கள் செய்து சாதனை

இராஜபாளையம் சுப்புராஜாமடம் தெருவில் அமைந்துள்ள துவக்கப்பள்ளியில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக உலகை அச்சுறுத்திய கொரோணா தற்காப்பு முச்சு பயிற்சி அடங்கிய விழிப்புணர்வு யோகசனங்களை பள்ளி மாணவிகள் உடல் முழுவதும் தீபங்கள் ஏற்றி செய்தனர். இந்த யோகா பயிற்சியில் தனியார் பள்ளி மாணவிகள் சஷ்டிகா, ஹர்ஷினி, மற்றும் வர்நிகா ஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு உபவிஷ்ட சோனாசனம், ஏகபாத சிரசாசனம், பத்ம விருச்சியாசனம் ஆகிய யோகாசனங்களை உடல் முழுவதும் தீபமேற்றி செய்து சாதனை படைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கணேஷ் மற்றும் பதஞ்சலி இயக்குனர் நீராத்தி லிங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு யோகாசனம் செய்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்..செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!