மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது. இங்கு300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கார்த்திகை தீபம், கொழுபொம்மை, விநாயகர் சிலைகள், கிறிஸ்மஸ் பொம்மை ஆகியவை தயாரித்து வருகின்றனர்.தற்பொழுது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் மற்றும் பெரிய விளக்குகள் ஆகியவை தயாரித்து வருகின்றனர்.சிறிய அகல்விளக்கு ஒரு ரூபாய் முதல் அலங்கார அகல் விளக்குகள் 250 ரூபாய் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுகொரான காலத்தில் இருந்து தற்போது வரை விற்பனையாகாமல் பொருட்கள் தேங்கி உள்ளதால் சிறு, மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகள் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்டம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட லட்சுமி அகல்விளக்கு, விநாயகர் அகல் விளக்கு, 5 தீபம் ஆகியவை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.தற்போது கொரான காலம் என்பதால் விற்பனை சரியாக நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.


You must be logged in to post a comment.