மதுரையில் வலம் வரப்போகும் திருநங்கை மருத்துவர் …..

மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை பிடித்து விசாரித்தபோது தான் எம்பிபிஎஸ் முடித்து உள்ளதாகவும் தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதுடன் சமுதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக தனது நிலையை கூறி திலகர் திடல் காவல் ஆய்வாளர் கவிதாவிடம் அழுதார்….. நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் அவரது மருத்துவ படிப்பதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று சரி பார்த்ததில் அவர் கூறிய தகவல் உண்மை என்பதை அறிந்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்ததுடன் மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார் தற்போது மருத்துவராக திருநங்கை அவர்கள் தனது பணியை தொடங்க இருக்கிறார்….. கூடிய விரைவில் திருநங்கை ஒருவர் டாக்டராக மதுரை மாநகரில் வலம் வரப்போகிறார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே…..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!