திரும்பரங்குன்றம் வைக்கம் பெரியார் நகரில் உள்ள குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்குமுன் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தை அடுத்துள்ள சாமநத்தம் ஊரட்சிக்குட்பட்ட வைக்கம் பெரியார் நகர் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு சுமார் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 46.79 லட்சம் மதிப்பீட்டில் உயர் குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது.சுமார் பதினைந்து ஆண்டு காலமாக இப்பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது நகர் விரிவாக்கம் செய்யப்பட்டதை யடுத்து தற்போது சுமார் 5000க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட 2500 குடும்பங்களுக்கும் மேல் உள்ள நிலையில் உயர் நீர்த்தேக்கத் தொட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சில ஆண்டுகாலமாக சரிவர பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்பினால் இடிந்து விழும் அபாயம் ஏற்படுவதால் தற்போது நான்கில் ஒரு பங்கு கொள்ளளவு மட்டுமே தண்ணீரை நிரப்பி பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியால் உயிர் பலி ஏற்படும் முன்னரே சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனே இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக தற்போது பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அங்கங்கே தொடர்ந்து பெய்யும் கன மழையால் வீடுகள் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இங்குள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் ஒரு வீடு இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.இதனைத்தொடர்ந்து சிதலமடைந்த உயர் குடிநீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்தாள் அப்பகுதியில் குடியிருப்பு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறையினர் இந்த உயர்குடி நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்து இதன் உறுதிப்பாட்டை இப்பகுதி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், இதனை மராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!