மதுரையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதல் – ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

மதுரை அண்ணாநகர் கோல்சா காம்ப்ளக்ஸ் அருகே பிரதான சாலையில் இரவுநேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியநிலையில் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வதும் அப்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பு இளைஞர்கள் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துவந்து நடுரோட்டில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி ஆயுதங்களால வெட்டிவிட்டு தப்பித்து செல்லும் காட்சிகளையும் அருகில் உள்ள மற்றொரு இளைஞர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் தற்போது அந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது,இது குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வீடியோ காட்சிகளை ஆதரமாக வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்,மதுரையில் ஆள்நடமாட்டம் உள்ள போக்குவரத்து சந்திப்பு பகுதியான சென்ட் மேரிஸ் சாலையில் தலையை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே நாளில் மற்றொரு பிரதான சாலையில் இளைஞர்கள் ஆயுதங்களோடு மோதிக்கொண்ட சம்பவமும் அரங்கேறியது மதுரை மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!