திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை – கோவில் நிர்வாக அறிவிப்பு

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி உற்சவ திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.இந்நிலையில், இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி திருவிழாவான, சுவாமிக்கு காப்புக்கட்டுதல், வேல்வாங்குதல், சூரசம்ஹாரம் மற்றும் பாவாடை சாத்துதல் ஆகிய திருவிழாக்கள் முறையே நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஆகிய ஏழு நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில், கந்தசஷ்டி திருவிழாவில் சூரகம்ஸார நிகழ்வானது முக்கியமான ஒன்றாகும்.இந்நிலையில், வருகின்ற 20ம் தேதி நடைபெறும் சூரகம்ஸார நிகழ்விற்கு முன்பாக, காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பகல் 12.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் சூரகம்ஸார நிகழ்வானது 5.30 மணி வரை திருக்கோவில் வளாகத்தில் நடைபெறும் என்றும், பின்னர் 6.30 மணியளவில் சாமி சேர்த்தல் நிகழ்வு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, மாலை நடைபெறும் சூரகம்ஸார நிகழ்வில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், மேலும் சூரகம்ஸார நிகழ்வு முடிந்த பின்னர் 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!