இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சிறிய அளவிலான சாலை விரிவாக்க பணி …தூங்கிக்கொண்டே பணியாற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை …கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

மதுரை மாவட்டம் பசுமலை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறு கால்வாயை பாலத்தை கட்டி முடிப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையினால் இரண்டரை ஆண்டுகாலமாக பணி நடந்து கொண்டிருக்கிறது ..தூங்கிக் கொண்டே இந்த பணியானது நடந்துகொண்டிருக்கிறது .. இந்த பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது ..இது இப்பொழுது ஒரு வழிப்பாதையாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது உயிர் பலி ஏற்படுவது மேலும் இதற்கான போக்குவரத்தை செய்வதற்கு போக்குவரத்து காவல்துறையினர் தனியாக நியமிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகாலமாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.. அருகிலேயே பள்ளி மற்றும் ஒரு பாலிடெக்னிக் ஒன்றும் உள்ளது ..பலமுறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தப் பணியானது சட்டமன்ற தொகுதி ராஜன் செல்லப்பா  வீட்டின் நுழைவுவாயிலில் தான் நடந்து கொண்டிருக்கிறது .மிக விரைவில் இந்த பாலத்தை பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!