ஊர்க்காவல் படைப் பிரிவில் சேர்ந்து பணிபுரிய 20.11.2020 முதல் 21.11.2020 காலை 9 மணி முதல் மதியம் 01 மணிவரை ஊர்க்காவல் படைக்கு தேர்வு நடைபெற உள்ளது.

மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் சேர்ந்து பணிபுரிய 20.11.2020 முதல் 21.11.2020 காலை 9 மணி முதல் மதியம் 01 மணிவரை ஊர்க்காவல் படைக்கு தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட 40 வயதுக்குட்பட்ட நல்ல உடல் தகுதியுடன் இருத்தல் வேண்டும். மேலும் ஊர்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு காவல்துறையினரால் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அதன்பின்னர் தான் மாதத்திற்கு *5 தினங்கள் பணியும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 560/- மட்டும் சம்பளமாக வழங்கப்படும்.இத்துறைக்கு சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் *கல்வி மற்றும் வயது சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம் கொண்டுவர வேண்டும். மேலும் ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை மதுரை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஊர் காவல் படை அலுவலகத்துத்தில் 12.11.2020 முதல் 17.11.2020 வரை ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பெற்றுக்கொள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!