இராஜபாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் 3 அடி உயரம் செங்கலில் அடிக்கு விருச்சாசனத்தில் 1.30 மணி நேரம் நின்றபடி உலக சாதனை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இராஜபாளையம் ஸ்போர்ட் லேண்ட் மற்றும் கிங்மேக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் யோகா மூலம் உலக சாதனை நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்து வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் டால்வின் ராஜ் செங்கலை 3 அடி உயரத்திற்க்கு அடுக்கி அதன் மீது ஒற்றைக் காலில் நின்ற படி விருச்சாசனம் என்ற யோகாசனத்தை 1.30 நிமிடம் நின்று உலக சாதனை செய்தார்.இதற்க்கு முன்பு இச்சாதனையை சென்னையை சேர்ந்த மாணவர் 30 நிமிடம் செய்துள்ளார் அதை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் 1மணி நேரம் செய்து சாதனை படைத்துள்ளார் இந்த சாதனையை இன்று டால்வின் ராஜ் 1 மணி நேரம் 30 நிமிடம் நின்று சாதனை படைத்தார் இந்த சாதனையை குளோபல் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி நிர்மல் குமார் , மற்றும் கலைமாமணி சுந்தரவேல் ,தனலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு உலக சாதனை புக்கில் பதிவு செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் சாதனை படைந்த மாணவன் டால்வின் ராஜை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் கலந்துகொண்டு வாழ்த்தி சான்றிதழ்கள் மற்றும் கோப்பையை வழங்கினார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை பயிற்சியாளர்கள் சத்தியமூர்த்தி இசக்கிமுத்து, சதீஷ், செய்யது ,பேச்சிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!