விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் அரியவகை உயிரினமான உடும்பு நடமாட்டம். விலங்கு நல ஆர்வலர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு.இராஜபாளையம் தென்றல் நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் அரிய வகை உயிரினமான உடும்பு புகுந்ததாக வனத்துறையினர் மற்றும் விலங்கியல் ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விலங்கியல் நல ஆர்வலர் மதன் என்பவர் சம்பவ இடத்திற்க்கு வந்து அரிய வகை உயரினமான 3 அடி நீளமுள்ள உடும்பு – ஐ உயிருடன் பத்திரமாகமீட்டு வனத்துறையிடம் ஓப்படைத்தனர்.வனத்துறையினர் அரிய வகை உடும்பை அடர்ந்த வனப்பகுதி காப்பு காட்டில் விடுவதாக தெரிவித்தனர்.


You must be logged in to post a comment.