விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள உள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் 43 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அனையில் 42 அடி எட்டி உள்ளது. இந்த நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்தி 8 கண்மாயிகளுக்கு பாத்தியபட்ட 50 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தை அடுத்து இன்று பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா ஆகியோர் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டனர் விவசாயிகள் தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.