இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் மேலாக இடியுடன் கூடிய கனமழை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் இரவு நேரத்தில் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சத்திரபட்டி, சேத்தூர், கிருஷ்ணாபுரம், தளவாய்புரம், முறம்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை சுமார் இரண்டு மணி நேரம் மேலாக பெய்ததுஇதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராமப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சோளம் நடவு செய்து விவசாய பணிகளை துவக்க நிலையில் பருவ மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் காணலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்இராஜபாளையம் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவரா மூடாத நிலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியும், ஒரு சில இடங்களில் கழிவுநீர் . தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்க்காக தோண்டிய குழிகளை கண்காணித்து சரிவர மூட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

.செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!