மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கதிரவன் – முருகன் ஜி மோதல் பரபரப்பு.

மதுரை திருநகர் பகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொது செயலர் கதிரவன் (திமுக ஆதரவாளர்) தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முருகன் ஜி யும் (அதிமுக ஆதரவாளர்) பங்கெடுத்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய கதிரவன்;மதுரையில் உள்ள திருநகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இல்லத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது நினைவு இல்லமாக்க 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தற்போது வரை நினைவு இல்லம் அமைக்க முட்டுக்கட்டை போடும் இந்திராகாந்தி நினைவு மேல்நிலை பள்ளி நிர்வாகத்தை கண்டித்து வருகிற நவ., 9 ஆம் தேதி பள்ளி முன்பு ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.அதனை தொடர்ந்து பேசிய கதிரவனோ வருகிற 2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தவுடம் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை ஸ்டாலின் சூட்டுவார் எனவும், அதிமுக, பாஜக கூட்டணி தற்போது வரை அதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை என தெரிவித்தவுடன், அருகில் இருந்த முருகன் ஜி ஆவேசமடைத்து கதிரவணனின் பேச்சை இடைமரித்ததால் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது பேசிய முருகன் ஜி, 113 வது ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவின்போது திருநீரை அவமதித்த ஸ்டாலின் எவ்வாறு மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட என்று ஆவேசம் காட்டினார்.இன்றைக்கு கூட திமுக சட்டமன்ற உறுப்பினர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை உணவிற்கு கஷ்டப்படும் காலத்தில் உதவி செய்துள்ளார் என்று தனது டிவிட்டர். பக்கத்தில் பதிவிட்டதை சுட்டிக்காட்டிவுடன் வாக்குவாதம் முற்றியதைத்தொடர்ந்து கைகலப்பாக மாறியது. அப்போது முருகன் ஜி ஆவேசமடைந்து கதிரவனின் ஆதரவாளரின் சட்டையை பிடித்து அடிக்க முற்பட்டார்.தொடர்ந்து அங்கிருந்த கதிரவன் செய்தியாளர்கள் சந்திப்பை விடுத்து பாதியிலே சென்றார். தொடர்ந்து முருகன் ஜி ஆவேசத்துடன் உரத்த குரலில் தேவரின் திருநீறை அவமதித்த ஸ்டாலினுக்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்படும் எனவும், திமுக சட்டமன்ற உறுப்பினர் PTR பழனிவேல் தியாகராஜனை வசைபாடியவாரே இருந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இதனால் அங்கு திருநகர் போலீசார் வந்ததும் கூட்டத்தினர் பக்குவமாக களைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!