கஷ்டபடுபவர்களுக்கு உதவுபவர்களே கடவுள் -. மதுரையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

மதுரை புதூர் அருகே தனியார் அரங்கில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றோர், மாற்றுதிறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி எம்ஆர் பிரபு தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற & மாற்றுதிறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு சேவாரத்னா விருதை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் கஷ்டபடுபவர்கள், பார்வையற்றோர், மாற்றுதிறனாளிகளுக்கு கஷ்ட காலத்தில் உதவி செய்பவர்கள் தான் கடவுள் என்றார்இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் லில்லி கிரேஸ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாண்டியராஜன், இராமகிருஷ்ணா ரமண ஆஸ்ரம் சுவாமி ஸ்ரீ சுப்ரமண்ய ஆனந்தா, சாந்தகுமார், அமீன் மற்றும் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!