திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மரு.சரவணன் மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனை நேரில் சந்தித்து தொகுதி வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மரு.சரவணன் கூறுகையில், “திருப்பரங்குன்றத்தில் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அணுகு சாலைப் பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும், நீண்ட நாட்களாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், தொகுதி முழுதும் 54 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி பணிகள் மேற்க்கொள்ள திட்டமிட்டு 16 கோடி அளவில் மட்டுமே பணிகள் நடைபெறுகிறது, மீதமுள்ள பணிகளை விரைவில் தொடங்க கோரிக்கை விடுத்து உள்ளேன், மதுரை சர்வதேச விமான நிலையம் ஒடு தளத்தை நீட்டித்தால் மட்டுமே சர்வதேச விமானங்கள் தரையிறங்க முடியும், ஒடு தளத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது, நிலங்கள் கையகப்படுத்தி விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும்” என கூறினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.