விபத்தில் சிக்கிய இளைஞர் கால் பாதம் இரண்டாக பிளந்தது…

மதுரை பழங்காநத்தம் காளவாசல் பிரதான சாலை வ. உ .சி பாலத்தில் மதுரை விளாங்குடி சேர்ந்த லட்சுமணன் 24 கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் பழங்காநத்தம் பகுதியில் இருந்து விளாங்குடி செல்வதற்காக இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார் இந்த நிலையில் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி இவர் கீழே விழுந்து சுமார் சில அடி தூரம் இழுத்துச் சென்றது இவரது கால் சைலன்சர் மாட்டிக்கொண்டு இவரது கால்பாதம் இரண்டாக பிளந்தது உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை ஓரமாக அமரவைத்து 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை காளவாசல் 108 வாகனம் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!