கீழகுயில் குடி பகுதியில் வீட்டின் முன் நின்றிருந்த கார் மீது மர்மநபர் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடிய காட்சி வெளியீடு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழகுயில்குடி பகுதியில் உள்ள சீனிவாச காலனியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 51) என்பவரது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த டாடா நெக்ஸன் காரின் மீது இன்று அதிகாலை 3.20 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் காரின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடியது எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளதையடுத்து, சம்பவம் குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து அலெக்ஸ் என்பவருக்கு சில மாதங்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது ஏதேனும் காரணங்களால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளதா என்பது குறித்தும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்.வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!