பெண்களை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்தது

மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோவில் செல்லவதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் விமான நிலையத்தில் வவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பேசுவோர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது.50 சதவீத இடஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவு என்று ஏற்கனவே உயர்நீதிமன்ற கூறி இருந்ததை,உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு நிறைவேற்ற முயற்சிகள் பாஜக சார்பில் முயற்சி கள் எடுக்கப்படும். மத்திய அரசை குறை சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.திமுக கந்தசஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியவர்களுக்கும், பெண்களை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசுவோர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை தான் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக அவர்களது ஆதரவு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்களை பாதுகாத்தே வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.ரஜினி கட்சி துவங்க வில்லை. இருப்பினும் கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியை பொறுத்து தான்.பாஜக ரவுடிகள் மிக்க கட்சியாக உள்ளது குறித்து டி கே ஸ் இளங்கோவன் பேசியது குறித்த கேள்விக்குதமிழக தாயமார்களை கொச்சை படுத்தியவர்களை தமிழ் சகோதரிகளே நடமாட்ட விடமாட்டார்கள் என்றுதான் தெரிவித்து இருந்தோம்.அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற தயார்ப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் பலமாக அமையும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!