ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சிமன்ற தலைவியாக உமாதேவி உள்ளார் துணைத் தலைவியாக ராணி உள்ளார் இதில் உமாதேவியின் கணவர் வனராஜ் DMK கிளைச் செயலாளர் ஆதிக்கம் செலுத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 4 மற்றும் 5வது வார்டு உறுப்பினர்களை அவமரியாதை செய்து அவர்கள் பகுதிகளுக்கு வேலை செய்யாமல் முட்டுக்கட்டை போடுவதாக கூறி இரண்டு வார்டு உறுப்பினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்5வது வார்டு உறுப்பினர் ராணி மற்றும் 6வது வார்டு உறுப்பினர் கனிசெல்வம் ஆகிய இருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரையும் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதியான குடிநீர் கழிவு நீர் வாறுகால் போன்ற திட்டங்கள் செய்ய கோரிக்கை வைத்தாலும் அதை செயல்படுத்த விடாமல் இவர்களை கூட்டங்களுக்கு அனுமதிக்காமலும் கூட்ட அரங்கில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வனராஜ் அனைத்து பணிகளையும் செய்து கொண்டு உறுப்பினர்களை பாகுபாடு பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான எந்த ஒரு வசதியும் செய்து தர மறுப்பதாகவும். அவர்கள் கம்பெனியில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மட்டும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் குற்றம்சாட்டி 5-ஆவது வார்டு மட்டும் ஆறாவது வார்டு உறுப்பினர் இருவரும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்ஊறாட்சி மன்ற தலைவி உமாதேவி கணவர் வனராஜ் ஜமீன் கொல்லங்கொண்டான் திமுக கிளை கழக செயலாளர் உள்ளார் தாழ்த்தப் பட்டவர்களுக்கு குரல்கொடுக்கும் திமுக கட்சியின் கிளை செயலாளர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்மீண்டும் தீண்டாமை கொடுமை வன் கொடுமை மேலோங்கி உள்ளதாக இந்த சம்பவம் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!