மதுரையில் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் ஆட்சியர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

மதுரை, கரும்பாலை PTகாலனியை சேர்ந்த வேலையா மகன் ராமன் இவரும்மதுரை பரவையை சேர்ந்த விஜய சரவணன் மகள் முத்தரசி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரும் திண்டுக்கல் சென்று அங்கு காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு சாதி என்பதால்ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ராமன்-முத்தரசி தம்பதியினருக்கு பெற்றோர் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது.இதனால் பாதுகாப்பு வழங்க கோரி  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பெற்றோர்களால் தங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல்வருவதாகவும், இருவருக்கும் திருமணம் செய்துகொள்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வயது நிரம்பிய பின்பு தான திருமணம் செய்து கொண்டதாக வும், அதனால் பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!