தெற்கு வட்டார போக்குவரத்து இருசக்கர வாகன பதிவு செய்யும் இடம் திடீர் இடமாற்றம்…..

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது இதில் தினசரி இருசக்கர வாகனங்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகிறது மேலும் f.c. மற்றும் எல்எல்ஆர் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று திடீரென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் உள்ள பழைய கருப்புசாமி கோவில் பின்புறம் புதிய இருசக்கர வாகன பதிவு இடமாக மாற்றப்பட்டுள்ளது.. இது குறுகிய பாதை என்பதால் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிற்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலை உள்ளது மேலும் அந்த பகுதியில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மற்றும் முட்கள் உள்ளிட்ட இருப்பதால் பொதுமக்கள் அங்கே வாகனம் நிறுத்துவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனால் பழைய முறையிலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!