சோழவந்தானில் பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் தலித் டிரஸ்ட் அலுவலகத்தில் நபார்டு திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இதற்கு தலித் டிரஸ்ட் இயக்குனர் முனைவர் பாலு தலைமை வகித்தார்.கிராம பெண்கள் முன்னேற்ற சங்க நிர்வாகி பசும்பொன் முன்னிலை வகித்தார்.காடுபட்டி வார்டு உறுப்பினர் சாந்தி வரவேற்றார்.சோழவந்தான் கனரா வங்கி மேலாளர் கனகவேல் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.இதையடுத்து தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்,கனரா வங்கி அலுவலர் மனோகரன்,சௌத் இந்தியன் வங்கி அலுவலர் சின்னத்துரை ஆகியோர் வங்கிகள் மூலம் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கடன்கள் குறித்து விளக்கினர்.இதன் பின்னர் கறவை(பால்) மாடு வளர்ப்பு, கலப்பின உற்பத்தி,பால் உற்பத்தி, தொழிற்பயிற்சி,சிறு சேமிப்பு உள்ளிட்டவை மூலம் பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறும் வழி முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியுடனும்,முகத் கவசம் அணிந்தும் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!