பிரதமரால் பாராட்டு பெற்ற சலூன் கடை காரர் மோகன் மீது கந்து வட்டி புகார்.வழக்குப்பதிவு

மதுரை சலூன் கடைக்காரர் மோகன் மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கியிருந்தார். இதன் மூலம் பிரதமரின் மன் கி பாத் உரையிலும் பாராட்டு பெற்றிருந்தவர் மோகன் .மோகன் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கங்கை ராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.30,000 ஐ வட்டியுடன் திருப்பி கொடுத்த பின்னரும் மிரட்டல் என புகார் செய்யப்பட்டுள்ளது.கங்கை ராஜன் புகாரின் பேரில் மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மோகனிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது  கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். இதனால் பிரதமர் மோடியால் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டுபெற்றேன். ,இதனையடுத்து பாஜகவில் இணைந்தேன்.பாஜகவின் உட்பிரிவில் நிர்வாகியாகவும் நியமிக்கப் பட்டேன். என்னிடம், அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் செங்கை ராஜன் என்பவர் மருத்து செலவிற்கு 30ஆயிரம் வாங்கிய நிலையில் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இந்நிலையில் நான் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ளார். கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.கட்சியில் எனக்கு கிடைத்த நற்பெயரை கெடுக்கும் வகையிலும், என்னை பழிவாங்கும் நோக்கிலும் இது போன்ற புகார் வந்துள்ளதாகவும்,இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!