தவணை தொகை கூடுதலாக கேட்பதாக நடுரோட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் தீடிர் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் மகேந்திரன் ஆட்டோ ஓட்டுநரான இவர். ஆட்டோவை தனியார் பைனான்ஸ் நிறுவன உதவியுடன் கடனுதவி பெற்று மாதம் 9 ஆயிரம் வீதம் கடன் மாத தவணை கட்டி வந்துள்ளார். கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தவணை முறை சரியாக கட்டமுடியாத நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து தொல்லை அளித்து கூடுதலாக கேட்பதாக கூறி, இன்று மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த செக்கடி பகுதியிலுள்ள கக்கன் சிலை முன்பு மகேந்திரன் மதுபோதையில் வந்து, உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறபடுத்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல இன்று காலை மேலூர் அருகே காயாம்பட்டியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தொகை கேட்டு அநாகரிகமாக பேசியதாக கூறி பெண் ஒருவர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!