சுரண்டை அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி உயிருடன் மீட்பு..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேலப்பாவூரில் தனியார் கிணற்றில் புள்ளி மான் விழுந்து கிடப்பதாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாலசந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மேலப்பாவூர் மேல்புரம் சடையப்பபுரத்தில் தனியார் கிணற்றிற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்து கிடந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.இந்த புள்ளிமான் தெரு நாய்களால் விரட்டி வரபட்டு  கிணற்றில் விழுந்திருக்கலாம் என்றும் இப்புள்ளி மான் ஒருவயது மதிக்கதக்கது என்றும் தெரியவந்தது. இதனையடுத்து புள்ளி மான் வனகாவலர் பெருமாள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!