மதுரைக்கு எய்ம்ஸ் வருமா..? வராதா..? டி சர்ட் அணிந்து மரக்கன்றை நட்டு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர்

மதுரை திருநகரை சேர்ந்த திமுக வழக்கறிஞர் இள மகிழன் இரண்டு வருடங்களாகியும் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராத நிலையில் அதனை செயல்படுத்த கோறும் விதமாக மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா? என டீசர்ட் அணிந்து எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் அமைய உள்ள தோப்பூர் அரசு மருத்துவமனையில் 100 மரக்கன்றுகளை நட்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்காதை கண்டித்து மதுரை மாநகர திமுகவினர் மதுரைக்கு எய்ட்ஸ் வருமா..? வராதா..? என டி.சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 100 மரக்கன்றுகளை நட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 1264 கோடியில் அமைய உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018ல் அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்காததை கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுகவினர் 70 க்கும் மேற்பட்டோர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் அரசு நுரையீரல் மருத்துவமனை எதிரில் மதுரைக்கு எய்ம்ஸ் வருமா..? வராதா..? என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து மத்திய,, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான பணிகளை மத்திய மாநில அரசுகள் துவங்காமல் தொடர்ந்து காலதாமதம் படுத்தி வருவதால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அரசு மருத்துவமனை அமைவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டியும் தற்போது வரை தொடங்கவில்லை மேலும் இங்கு மருத்துவமனை அமைய வில்லை என்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஆர் பி உதயகுமார் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. அவரிடம் எய்ம்ஸ் குறித்து கருத்துக் கேட்டால் எந்த பதிலும் சொல்லாமல் மறுத்து வருவதாகவும் மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் இந்த பணிகள் இன்னும் துவங்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்..அண்மையில் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பொறித்த டீசர்ட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்ததைத் தொடர்ந்து தற்போது திமுகவினர் மதுரைக்கு எய்ம்ஸ் வருமா..? வராதா..? என்ற வாசகத்துடன் டீசர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!