இராஜபாளையம் அருகே அய்யனாபுரம் பகுதியில் திருவில்லிபுத்தூர் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற்க்கான தனியார் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் வேலையிழந்த மற்றும் விளிம்பு நிலையில் உள்ள 400க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு
ரூ.4 லட்சம் மதிப்பில் 10 கிலோ அரிசி மற்றும் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் டெஸ்ட் நிறுவன திட்ட இயக்குநர் டாக்டர் வேல்மயில் மற்றும் மேலாளர் மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் மேல ராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன், மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்து வாலி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினர். மேலும் நிகழ்ச்சியின் போது பயனாளிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.