இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு.அப்பகுதி மக்கள் சாலை மறியல்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளராக பதவியில் இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.அந்த கொலை வழக்கில் இவருக்கு சம்பந்தம் இருப்பதாகக் கூறி இவரும் கைது செய்யபட்டதை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இவருடைய தலை மற்றும் முகம்பகுதியில் சரமாரியாக வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்ய வலியுறுத்தி முதுகுடி பொதுமக்கள் இராஜபாளையம் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் மற்றும் தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. மேலும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!