மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் ஆரம்ப சுகாதார மையங்களில் நிரந்தரமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூல் செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும், கடன் பெற்ற மக்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும், மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னகரம் பிராட்வே பகுதியில் உள்ள மணல்மேடு மருத்துவமனை அருகில் பகுதிகுழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ, ன். நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிகுழு செயலாளர் வை. ஸ்டாலின், அரசரடி பகுதிகுழுச் செயலாளர் கு. கணேசன் மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் முன்னதாக அப்பகுதியில் உள்ள பாரதியார் படிப்பகம் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் பாரதியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மற்றும் மலர்கள் தூவி மரியாதை செய்தனர் சிறுவர்களுக்கு பாரதியின் நினைவை போற்றும் வகையில் சிறு நூல் வழங்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!