இறந்த தன் மனைவியின் 30ம் நாளை முன்னிட்டு தத்ரூபமாக சிலை அமைத்த மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர்

மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன்,பிரபல தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8ந்தேதி இயற்கை எய்தினார்.தனது மனைவி தன்னை தனியே தவிக்கவிட்டு சென்றாலும் என்றும் என்னுடன் இருக்கவேண்டும் என்ற தன்னுடைய மனைவி மீது உள்ள பாசத்தினால்சேதுராமன் தனது மனைவி பிச்சைமணி அம்மாள் போன்ற சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்

.அதன்படி தனது வீட்டில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னாமற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில் 6 x 3 அடி உயரம் உடைய தனது மனைவியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாளை ஒட்டிதத்ரூபமாக வடிக்கப்பட்ட மனைவியின் சிலையை வைத்து வழிபாடு செய்தார்.இவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!