சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி வேலை நிறைவு குறித்து எம்எல்ஏ ஆய்வு செய்தார்

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் முடிந்து மகாகும்பாபிஷேகம் நடைபெறக்கூடிய தேதி குறித்த தருணத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கும்பாபிஷேக விழா நடைபெறவில்லை தற்போது தளர்வு காரணமாக திருப்பணி வேலைகள் நிறைவு பெரும் நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கு வந்த மாணிக்கம் எம்எல்ஏ ஜெனகை மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்து இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திருப்பணி நிறைவு பணிகளை ஆய்வு செய்த பின்னர் மகா மண்டபத்தின் இருபுறமும் மண்டபம் கட்டுவதற்கும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தவும் ராஜகோபுரம் முன்பாக காலியாக உள்ள இடத்தில் தகர சீட்டு அமைக்கவும் ஆலோசனை வழங்கினார் இதில் செயல் அலுவலர் சத்தியநாராயணன் ஆலய பணியாளர்கள் பூபதி வசந்த் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கொரியர் கணேசன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா பொதுக்குழு நாகராஜன் முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!